கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தற்போது லண்டனில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனும், அமெரிக்காவின் ஜான் இஸ்னரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல், அடுத்தடுத்து சுற்றில் மாறி மாறி கைபற்றி வந்தனர். இதனால் அரையிறுதி ஆட்டம் கிட்டத்தட்ட 6.30 மணி நேரம் நடைபெற்றது. இருவரின் ஆட்டம் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்டத்தின் இறுதியில் 7-6, 6-7, 6-7, 6-4, 26-24 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை வீழ்த்தி தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 32 வயதான ஆண்டர்சன் முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற தென் ஆப்பிரிக்கா வீரர் ஆவார்.


 



 


முதல் அரையிறுதி ஆட்டம் அதிக நேரம் நடைபெற்றதால், நேற்று முடியவேண்டிய இரண்டாவது அரையிறுதி ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, இன்று தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டம் நடால் மற்றும் ஜோகோவிச் இடையே நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர், இறுதி ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சனை எதிர்க்கொள்வவார்.