ரியோ ஒலிம்பிக் போட்டியில் நாட்டிற்காக பதக்கம் வெல்வேன் என்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய இந்திய மல்யுத்த வீரர் நார்சிங் யாதவ் உறுதி அளித்துஉள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் வேண்டுமென்றே எந்த தவறும் செய்யவில்லை என்று தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. பிறகு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது எந்த பதற்றமும் இல்லாமல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வேண்டும். நாட்டு மக்களின் இதயங்களை நரசிங் வென்றுள்ளார் என பிரதமர் கூறினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நார்சிங் யாதவ் கூறுகையில்:- ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது எனக்கூறினார்.