4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி இன்று தென்கொரியாவில் தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று தொடங்கிய 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று முதல் வரும் 25-ந் தேதி வரை மொத்தம்  17 நாட்கள் நடைபெறும். இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடரில் இந்தியா உட்பட 91 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். தென்கொரியாவில் முதல் முறையாகா குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது.


குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் லூகெர் சிவ கேஷவன், ஜெகதீஸ் சிங் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியை ஜியோ டி.வி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.