பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் கூறிய பிரதமர் மோடி!!
நாடு திரும்பிய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மகளிர் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.
இந்திய பிரதமர் மோடி, மகளிர் இந்திய அணியை நேரில் அழைத்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது தாங்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர்.