ENG vs SA: இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள்; தென்.ஆப். வெற்றிக்கு 312 ரன்கள் தேவை
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றனர். இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
19:06 30-05-2019
இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 312 ரன்கள் தேவை.
17:40 30-05-2019
36.5 ஓவரில் நான்காவது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து, 37.0 ஓவரின் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்துள்ளது.
15:11 30-05-2019
முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி; இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் ரன் ஏதுமின்றி இம்ரான் தாஹிர் பந்தில் அவுட் ஆனார்.
14:46 30-05-2019
டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.
டெல்லி/இங்கிலாந்து: 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் மே 30 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 வரை என மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது.
இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகள் நேரடியாக தொடரில் பங்கேற்றன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி சுற்று மூலம் தொடரில் நுழைந்தது.
உலக கோப்பையில் பங்கேற்ப்பதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. பயிற்ச்சி ஆட்டம் முடிந்து, இன்று முதல் உலக கோப்பைக்கான தொடர் ஆரம்பமாகி உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றனர். இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
இதுவரை இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த முறையை எப்படியாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு ஆட்டத்திலும் விளையாடும். அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தென்னாப்பிரிக்க அணியும் குறைந்து மதிப்பிட முடியாது. இந்த அணியும் இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை. உலக கோப்பையை வெல்லாத இரு அணிகள் மோதுவதால், இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும். போட்டி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது.