AFG v ENG: பேட்டிங்கில் தெறிக்கவிட்ட இங்கிலாந்து; 397 ரன்கள் குவிப்பு
இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றனர்.
18:38 18-06-2019
இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக அதிரடியாக ஆடிய அந்த அணியின் கேப்டன் ஈயன் மோர்கன் 148(71) ரன்கள் அடித்து அவுட் ஆனார். ஆப்கானிஸ்தான் அணியின் சார்பாக குல்பதின் நாயப் மற்றும் தவ்லத் சத்ரான் தலா மூன்று விக்கெட்டை கைபற்றினர்.
14:38 18-06-2019
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
மான்செஸ்டர்: 2019 ஐசி.சி உலகக் கோப்பை போட்டியில் இன்று நடைபெற உள்ள 24வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணியாக வலம் வரும் இங்கிலாந்து அணி, இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒரே போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்து 6 புள்ளிகளுடன் அட்டவணையில் 4வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. ஆப்கானிஸ்தான் அணி புள்ளிபட்டியலில் எந்தொரு ஒரு புள்ளியையும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறும். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் இந்த போட்டியில் வெற்றி பெற்று, நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று நம்பப்படுகிறது.
இதே மைதானத்தில் தான் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது குரிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான்: குலப்தீன் நயிப்(கேப்டன்), ஹராத்துள்ளா ஜாய், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துள்ளா ஷாகிதி, நஜிமுல்லா ஜத்ரான், முகமது நபி, ரசித் கான், தவ்லத் ஜார்தான், முஜீப் உர் ரஹ்மான், ஹமீத் ஹாசன், இக்ராம் அலி கில்.
இங்கிலாந்து: ஈயோன் மோர்கன்(கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மோயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட் / லியாம் பிளன்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித்.