உலகக் கோப்பை 2019 அரையிறுதியில் தோல்வி; எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்த நிருபரின் கேள்விக்கு விராட் கோலி பதில்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவர் இந்த உலகக்கோப்பையோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பது போலவும் வதந்திகள் வலம் வந்தன. இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி எம்.எஸ்.தோனிக்கு ஆதராவாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும், இனி வரும் ஆட்டங்களில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் தொடக்க வீரர்கள் 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றத்தை அளித்த போது தோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   


உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி  மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்று பயணம் செய்ய உள்ளது. அங்கு மூன்று T20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அந்த போட்டிகளில் தோனி பங்கேற்பாரா? அடுத்து என்ன செய்ய உள்ளார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி ”அவர் அடுத்து என்ன செய்ய உள்ளார் என்பது குறித்து எங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை, மேலும் அவரை பற்றி கடந்த வாரங்களில்  கூறியது போல் அவர் அவரது ஆட்டத்தை ஆடுகிறார், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல இறுதி வரை போராடுகிறார். கிரிக்கெட்டில் வெற்றி பெறவதற்கான வழி இதுதான்  என நம்புகிறார்” என பேசியுள்ளார்.