இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவு செய்த தென்னாப்பிரிக்க!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், இலங்கையை அணியை, தென் ஆப்பிரிக்கா, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், இலங்கையை அணியை, தென் ஆப்பிரிக்கா, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டம் இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ரிவர்சைடு மைதானம் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரரும், கேப்டனுமான கருணாரத்னே முதல் பந்துலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். அதன் பின் அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறி அணிக்கு அதிர்ச்சி அளித்தனர்.
இதையடுத்து 49.3 ஓவர் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்கள் சேர்த்து தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது இலங்கை அணி. தென்னாப்பிரிக்க அணியில் அதிக பட்சமாக மோரிஸ், பிரிட்டோரியஸ் தலா 3 விக்கெட்டுகளையும் ரபடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி கோக், ஆம்லா களமிறங்கினர். குயின்டன் டி கோக் 15 ரன்களில் வெளியேறி அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து வந்த ஃபாஃப் டு பிளெஸி மற்றும் ஆம்லா இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். 37.2 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 1 விக்கெட் மட்டும் இழந்து இலங்கை அணிக்கு எதிராக அபார வெற்றியை பதிவு செய்தது. அணியில் அதிகபட்சமாக ஃபாஃப் டு பிளெஸி 96 ரன்களும், ஆம்லா 80 ரன்களும் குவித்தனர்.