WTC: 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது இந்திய டெஸ்ட் அணி. இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் தற்போது முதலிடம் பிடித்துள்ளது.
WTC: 2019ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரை முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. அதன்பின் தற்போது மீண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியுள்ளது.
14 புள்ளிகள் பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்திய அணி. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் முதல் இடம் பிடித்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிரா செய்யப்பட்டதால் இந்திய அணிக்கு 4 புள்ளிகள் வழங்கப்பட்டது. மொத்தமாக 16 புள்ளிகள் பெற வேண்டிய இந்திய அணிக்கு ஒவர்களை மெதுவாக வீசியதால் இரண்டு புள்ளிகள் கட் செய்யப்பட்டது. ஐசிசியின் விதிப்படி ஒரு போட்டியில் வென்றால் 12 புள்ளிகளும், போட்டி டையில் முடிந்தால் 6 புள்ளிகளும், டிராவில் முடிந்தால் 4 புள்ளிகளும் ஒவ்வொரு அணிகளுக்கும் வழங்கப்படும்.
ALSO READ 19 ஆண்டுகளுக்குப் பிறகு லீட்ஸ் மைதானத்தில் ஆடப்போகும் இந்திய அணி!
புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. வெஸ்ட் இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 109 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் 12 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 2 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி நான்காம் இடத்தில் உள்ளது. இந்த புள்ளி பட்டியல் 2023 ஆம் ஆண்டு வரை செல்லுபடியாகும். இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. கடைசி போட்டியில் தோல்வி பெற்ற இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR