WWE Royal Rumble 2023: WWE ரசிகர்கள் நீண்ட நாள்களாக காத்துக்கொண்டிருந்த Royal Rumble 2023 சுற்று இன்று நடைபெற்றது. குத்துச்சண்டை மேடையில் சுமார் 30 பேர் சேர்ந்து சண்டையிடும் இந்த Royal Rumble சுற்றுக்கு ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். குறிப்பாக, 90 வினோடிகள் இடைவெளியில் ஒவ்வொரு குத்துச்சண்டை சூப்பர் ஸ்டார்களும் என்ட்ரி கொடுப்பதை காண்பதற்கே ரசிகர்கள் அனைவரும் தவமாய் தவமிருப்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Royal Rumble சுற்றின் சிறப்பம்சமே அந்த மேடையை விட்டு தரையில், வீரர்களின் உடல் பாகங்கள் பட்டுவிட்டாலே, ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவார். யார் அந்த மேடையில் கடைசிவரை இருக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படுவார். வழக்கமான குத்துச்சண்டை ஆட்டமாக இது இல்லாமல் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால்தான் இதற்கென தனி ரசிகப்படையே காத்துக்கொண்டிருக்கிறது. 



WWE குத்துச்சண்டை பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளதால், இதனை சுற்றிய வணிகம் என்பது பல கோடி ரூபாய மதிப்பை கடந்துள்ளது. ரே மிஸ்டீரியோ, ஆஸ்டின் தியரி, கோடி ரோட்ஸ், பிராக் லெஸ்னர் ஆகியோர் விளையாடுவதை காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். 


மேலும் படிக்க | WWE-ல் களமிறங்குகிறாரா கார்த்தி?... வைரலாகும் வீடியோ


இதில் வெற்றிபெறுவர்கள், WWE குத்துச்சண்டையில் மிகப்பெரும் நிகழ்வாக கருதப்படும் Wrestle Mania சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறுவார்கள். இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு நடந்த 35ஆவது ஆடவர் Royal Rumble சுற்றில், கோடி ரோட்ஸ் வென்றுள்ளார். 30ஆவது வீரராக இறங்கிய கோடி ரோட்ஸ் உடன் சேத் ரோலின்ஸ், ஆஸ்டின் தியர், கந்தர் ஆகியோர் கடைசி நால்வராக ஆட்டத்தில் இருந்தனர். ஆஸ்டின் தியரி, சேத் ரோலின்ஸ் அடுத்தடுத்து வெளியேற கடைசி கட்டத்தில் கந்தருடன் போராடி கோடி ரோட்ஸ் மூன்றாவது முறையாக Royal Rumble பட்டத்தை வென்றார். தொடர்ந்து, Wrestle Mania சுற்றுக்கு நேரடியாக சென்றுள்ளார்.


எதிர்பாராத எட்ஜ் என்ட்ரி


இந்த போட்டியில் எதிர்பாராமல் என்ட்ரி கொடுத்த எட்ஜ் வந்த உடன் ரே மிஸ்டீரியோ உள்பட அனைவருக்கும் ஸ்பியர் போட்டு மிரட்டினார். இருப்பினும், அவரை சில நிமிடங்களிலேயே ஜட்ஜ்மெண்ட் டே வெளியேற்றினார். இருப்பினும், அவர் மேடையை விட்டு வெளியே வந்தும் பலரிடமும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 



12ஆவது ஆளாக வந்த பிராக் லெஸ்னர் ஷேமஸ் உள்ளிட்ட பலருக்கும் சூப்லஸ் சிட்டி ஸ்மாக்கை போட்டி அதகளப்படுத்தினார். ஆனால், அவர் வந்து 3ஆவது நிமிடத்திலேயே பாபி லாஷ்லே அவரை வெளியே தள்ளிவிட்டு அதிர்ச்சியளித்தார். 2003, 2022 சாம்பியனான பிராக் லெஸ்னர் இம்முறை விரைவிலேயே வெளியேறியது மிகவும் அதிர்ச்சியை கொடுத்தது. 


மாஸ்கை தூக்கியெறிந்த ரே மிஸ்டீரியோ


17ஆவது ஆளாக ரே மிஸ்டீரியோ உள்ள வந்தார். அவரும் பதுங்கி பதுங்கி விளையாட சில நிமிடங்களிலேயே அவரும் வெளியேறினார். ஆனால், இம்முறை அவர் மாஸ்க்கை கழட்டி, அதனை கிழித்தெறிந்து என்ட்ரி கொடுத்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.



மகளிர்  Royal Rumble பியான்கா பெலேர் வென்றார். மேலும், LA நைட் உடனான ஆட்டத்தில், ப்ரே வியாட் வெற்றிபெற்றார். இன்றைய நிகழ்வில், ரோமன் ரெய்ன்ஸ் - கெவின் ஓவன்ஸ் மோதும் WWE Universal Championship முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | IND vs NZ: இந்திய அணியில் கழட்டிவிடப்படுவது யார்...? இக்கட்டில் ஹர்திக் படை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ