ஒரு ரூபாயை வரதட்சணையாக வாங்கியுள்ளார் இந்திய மல்யுத்த வீரரான யோகேஸ்வர் தத் தனது திருமணத்திற்கு வாங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரதட்சணை என்பது பெண்ணுரிமைக்கு எதிரானது என்றாலும், இன்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திருமணத்தின் போது வரதட்சணை பெறுவது வழக்கமாக இருக்கிறது. 


ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த யோகேஸ்வர் தத்துக்கும் ஷீத்தல் என்பவருக்கும் நாளை டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளது.


இந்நிலையில் தனது திருமணத்திற்கு வரதட்சணையாக ஒரு ரூபாயை பெண் வீட்டாரிடம் கேட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார் யோகேஸ்வர் தத்.


செய்தியாளர்களிடம் பேசிய யோகேஸ்வர் தத்:-


எனது சகோதரிகளின் திருமணத்திற்கு, வரதட்சணை பணம் கொடுப்பதற்காக என் குடும்பத்தினர் எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதை நான் பார்த்துள்ளேன். எனவே நான் வளரும் போதே இரண்டு காரியங்களை செய்ய வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டேன். ஒன்று நான் மல்யுத்தத்தில் சாதித்து என் குடும்ப வறுமையை போக்க வேண்டும் என்பது. இரண்டாவது என்னுடைய திருமணத்திற்கு ஒரு ரூபாய் மட்டுமே வரதட்சணையாக பெற வேண்டும் என்பது. என யோகேஸ்வர் தத் தெரிவித்துள்ளார்.