ஓய்வில் இருந்து திரும்புவதாக அறிவித்த யுவராஜ் சிங்! மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பா?
2019ம் ஆண்டு ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங் தற்போது மீண்டும் விளையாடுவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ஓய்வில் இருந்து வெளியேறுவதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் களத்தில் இறங்குவதாகவும் அறிவித்துள்ளார். பிப்ரவரி 2022 இல் மீண்டும் கிரிக்கெட் விளையாடப் போவதாக யுவராஜ் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். "உங்கள் தலைவிதியை கடவுள் தீர்மானிக்கிறார் !! பொது கோரிக்கையின் பேரில் பிப்ரவரியில் மீண்டும் களத்தில் இறங்குவேன் என்று நம்புகிறேன் ! இது போல் ஒரு உணர்வு இதுவரை வந்தது இல்லை! உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி, தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்! ஒரு உண்மையான ரசிகன் தான் கடினமான காலங்களில் ஆதரவாக இருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டில் 19 ஆண்டுகள் பணியாற்றிய யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2019ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். யுவராஜ் சிங் இந்தியாவுக்காக 304 ஒருநாள், 40 டெஸ்ட் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007 T20 உலகக் கோப்பை மற்றும் 2011 ODI உலகக் கோப்பைகளில் முக்கிய வீரராக இருந்தார் யுவராஜ். 2011 உலகக் கோப்பையில் போட்டியின் தொடர் நாயகன் பட்டத்தை வென்றார் யுவராஜ். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கினார். 90.50 சராசரியில் 362 ரன்கள் குவித்து 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். யுவராஜ் 2011 உலகக் கோப்பையில் தனது வாழ்க்கையின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார், ஆனால் 2011 உலகக் கோப்பை முடிந்த சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
2007ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 பந்துகளில் 6 சிஸ்சர்கள் அடித்ததை கிரிக்கெட் ரசிகர்கள் ஒருபோதும் மறக்க மறக்கமாட்டார்கள். தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு யுவராஜ் தனது ஓய்வை திரும்ப பெறுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் இந்திய அணியில் விளையாடுவாரா என்பது பற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
ALSO READ இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR