தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100_வது நாளாக நடைபெற்ற தொடர் போரட்டம் நடைபெற்றது. கடந்த 22-ம் தேதி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை மீறி போராட்டம் நடைபெற்றதால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளதால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம்: எடப்பாடி!


தற்போது, தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டு யார் என்பது குறித்து முதல் தகவல் அறிக்கையில் (FIR) குறிப்பிட்டுள்ள தகவல்கள் வெளி வந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு இரண்டு அதிகாரிகள் உத்தரவிட்டர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்கள் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு துணை வட்டாட்சியர் கண்ணன் மற்றும் கலெக்டர் அலுவலக பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு தூத்துக்குடி தனி துணை வட்டாட்சியர் சேகர் என இருவர்கள் உத்தரவிட்டுள்ளா் என்று தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


டிவிட்டரில் டிரெண்ட்டாகும் "என்கவுண்டர் எடப்பாடி"!


மேலும் பலமுறை எச்சரித்தும் வன்முறை தொடர்ந்ததாலும், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற காரணத்தினால் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எப்.ஐ.ஆர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.