தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விஜயகாந்த் தலைமையில் போராட்டம்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் போராட்டம் நடந்தினர்!
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் போராட்டம் நடந்தினர்!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தேமுதிக சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் தேமுதிக தலைவர் கருப்புச்சட்டை அணிந்து கலந்துகொண்டார்.
மேலும், இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான தேமுதிக தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று, மதுரை மற்றும் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திலும் தேமுதிக தொண்டர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.