தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஸ்டெர்லைட்  எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமரரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 80 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சில்வர்புரம்  பண்டாரம்பட்டி, மாதா பேராலயம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இருப்பதாக கூறி அந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆலையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்தநிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி விவிடி சிக்கல் அருகே நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய்க்குள்ளான பொதுமக்களுக்கு 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் கலந்து கொண்டதாக கூறுகின்றனர்.