விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகத்திலும் சிம்பு!!
விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இப்[படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். இப்படத்தை மதன், எல்ரெட் குமார், ஜெயராமன் இணைந்து தயாரித்தார்கள்.
முன்னாள் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் 2-ம் பாகம் பற்றிய தனது எண்ணம் குறித்து விழா ஒன்றில் பேசிய கெளதம் மேனன். ''விண்ணைத்தாண்டி வருவாயா 2'-ம் பாகத்தில் 4 நாயகர்கள் இருப்பார்கள், அதில் சிம்பு ஒருவராக இருப்பார் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சமீபத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2'-ம் பாகத்தில் சிம்புவுக்கு பதிலாக மாதவன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தில் சிம்புவையே ஒப்பந்தம் செய்துள்ளதாக இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.