IPL 2018: கெயிலுக்கு போட்டியாக களமிரங்கிய KL ராகுல்!
IPL 2018 தொடரின் 18-வது ஆட்டத்தில், டக்வெற்த் முறைப்படி பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
IPL 2018 தொடரின் 18-வது ஆட்டத்தில், டக்வெற்த் முறைப்படி பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
IPL 2018 தொடரின் 18-வது ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் நேற்று கெல்கத்தாவில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி தரப்ப்பில் கிறிஸ் லெய்ன் 74(41), தினேஷ் கார்த்திக் 43(28), உத்தப்பா 34(23) ரன்களை குவித்தனர்.
இதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் KL ராகுல் மற்றும் கெயில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
எனினும் ஆட்டத்தின் 8.2 ஓவரில் ஆட்டத்திணை மழை குறுக்கிட்டது. அப்போதைய நிலவரப்படி பஞ்சாப் 96 ரன்கள் எடுத்திருந்தது. மழையின் காரணமாக போட்டியில் ஓவர்கள் டக்வெற்த் முறைப்படி குறைக்கப்பட்டது.
மழை நின்ற பின்னர் மீண்டும் ஆட்டத்தினை தொடர்ந்த பஞ்சாப் அணியின் KL ராகுல் 27 பந்தில் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதேப்போல் அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் கிறிஸ் கெயில் 38 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். இதனால் பஞ்சாப் அணி 11.1வது ஓவரில் 125 குவித்தது. இதனையடுத்து டக்வெற்த் முறைப்படி பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.