மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஏப் 27-ல் தொடக்கம்!! அழகர் திருவிழா!!
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 27ஆம் தேதி திருக்கல்யாணமும், ஏப்ரல் 30ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில், இரண்டாம் நாளன இன்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன வாகனத்திலும் பவனி வருகின்றனர். இதனை காண எராளமான பத்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
சிவனைத் தரிசித்தால் துணிவு உண்டாகும்....!
பூத வாகனத்தில் வரும் சிவனைத் தரிசித்தால் காரணம் இல்லாத பயம் நீங்கி மனதில் துணிவு உண்டாகும். வெண்ணிற அன்னம் துாய்மையின் அடையாளம். பாலும், தண்ணீரும் கலந்திருந்தாலும், பாலை மட்டும் அருந்தும் தன்மை கொண்டது.
பாலும், நீருமாக உலகத்திலும் நன்மை, தீமை கலந்தே இருக்கிறது. அன்னம் போல மனிதனும், நல்லதை மட்டும் பின்பற்ற வேண்டும் என்பதை உணர்த்த மீனாட்சி அன்ன வாகனத்தில் பவனி வருகிறாள். இதனடிப்படையில் இன்றிரவு மாசி வீதிகளில் பவனி வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரரைத் தரிசிப்போம்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25ஆம் தேதி இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 26ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக்விஜயமும் நடைபெற உள்ளது.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்.......!
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 27ஆம்தேதி நடைபெறும்.
இத்திருக்கல்யாணம் முடிந்த உடன் மீனாட்சி, 28ஆம் தேதி, பிரியாவிடை சமேதராக சுந்தரேஸ்வரர் காட்சியளிப்பதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண் குளிர கண்டு ரசிப்பார்கள்.
இதையடுத்து, வரும் 29-ஆம் தேதி அதிகாலை மூன்று மாவடியில் எதிர்சேவை பூஜை நடைபெறுகிறது. 30ஆம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று அதிகாலை 5.45 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இவ்விழாவினில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கவிருப்பதால், அதற்கான பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.