இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வந்தது. இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் நேற்று மோதின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அதிகட்பட்சமாக ஷபீர் ரஹ்மான்  50 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். 


வெற்றி பெற 167 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 10 ரன்களில் அவர் அவுட் ஆக, அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். எனினும் கேப்டன் ரோஹித் ஷர்மா பொறுப்பாகி விளையாடி அரைசதம் அடித்தார். 56 ரன்களில் அவர் அவுட் ஆன பொது பரபரப்பானது. கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்த பொது மனிஷ் பாண்டே ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அப்பொழுது இந்திய அணி வெற்றி பெற 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை.


மறுமுனையில் தமிழக வீரர் விஜய் சங்கர் இருந்தார். 19 வது ஓவரை வங்கதேச அணியின் பந்து வீச்சாளர் ருபேல் வீசினார். அதை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார். அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். மீண்டும் சிக்ஸ் அடித்தார். நான்காவது பந்தில் ரன் எடுக்கவில்லை. ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார். ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். 19 வது ஓவரில் மொத்தம் 6 பாலில் 22 ரன்கள் எடுத்தார் கார்த்திக்.


கடைசி ஓவரை(20) வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான சௌமியா வீசினார். முதல் பந்தை விஜய் சங்கர் எதிர்கொண்டார். ஓவரின் முதல் பந்து வைடாக (Wide) மாறியது. இரண்டாவது பந்தில் ரன் எதுவும் இல்லை. மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார் விஜய் சங்கர். தற்போது தினேஷ் கார்த்தி ஸ்டிரைக்கு வந்தார். மூன்றாவது பந்தில் தினேஷ் கார்த்தி ஒரு ரன் எடுக்க, நான்காவது பந்தில் விஜய் சங்கர் பவுண்டரி அடித்தார்.  2 பந்தில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸ் அடிக்க முயற்சி செய்த விஜய் சங்கர் கேட்ச் அவுட் ஆனார். 


இந்த இடைப்பட்ட நேரத்தில் தினேஷ் கார்த்தி மற்றும் விஜய் சங்கர் ரன் எடுக்க ஓடியதால், ஸ்டிரைக் பக்கம் தினேஷ் கார்த்திக் சென்றுவிட்டார். விஜய் சங்கர் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களம் இறங்கினார்.


 


தற்போது ஒரு பந்தில் ஐந்து ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி பந்தை எதிக்கொண்டார் தினேஷ் கார்த்திக். சௌமியா போட்ட பந்தை பவுண்டரிக்கு வெளியே பறக்கவிட்டு சிக்சாக மாற்றினார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். தனது அதிரடியான ஆட்டத்தால் இந்தியாவுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தார்.