தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் இருப்பதால் தினமும் நடைபெறும் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றன. இதனால், தமிழகத்தில் இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் தலைவர் வக்கீல் கே.பாலு 2012ல் சென்னை ஐ கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வழக்கை விசாரித்த சென்னை ஐ கோர்ட் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றின் அருகில் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்றும் உத்தரவு பிரபித்தது. 


இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.


தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு ஜூலை 23 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 1300 கடைகளையும் தனித்தனியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படியும் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.