காவிரி விவகாரத்தில் பொம்மலாட்டம் போடும் தமிழக அரசு -ராமதாஸ் தாக்கு
காவிரி பிரச்சினையில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், அது காலத்தைக் கடத்தும் பயனற்ற உத்தி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரி பிரச்சினையில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், அது காலத்தைக் கடத்தும் பயனற்ற உத்தி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதைக்குறித்து டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கேள்வி-பதில் பாணியில் அவர் கூறியதாவது:-
கேள்வி: உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்போவதாக தமிழக அமைச்சர்கள் வீர வசனம் பேசுகிறார்களே?
பதில்: பேசட்டும்.... பேசட்டும். அதைத் தவிர அவர்களால் வேறு என்ன செய்ய முடியும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பதே இயலாமையின் வெளிப்பாடு தான். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து தங்களின் கையாலாகாதத் தனத்தை அம்பலப்படுத்திக் கொள்ளப் போகிறார்கள். இதைத் தவிர வேறு எந்த பயனும் இதனால் ஏற்படப்போவதில்லை.
காவிரி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?
ஒரு நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை சம்பந்தப்பட்டவர்கள் செயல்படுத்தாத போது அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடருவது வழக்கமானது தான். ஆனால், அது கடைசி வாய்ப்பாகத் தான் இருக்க வேண்டும். அதற்கு முன்பாகவே நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த அனைத்து வகையான வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதற்கு பதிலாக எல்லாம் தானாக நடக்கும் எனக் காத்திருந்து விட்டு, எதுவும் நடக்காத பின்னர் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவது குதிரைகள் ஓடிய பின்னர் லாயத்தை பூட்டுவதற்கு சமமானதாகவே பார்க்கப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தமிழக ஆட்சியாளர்கள் நடந்து கொண்ட விதமும் அப்படித்தான் இருந்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், அதை செய்யும்படி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசுக்கு ஆயிரமாயிரம் வழிகள் இருந்தன. ஆனால், அவற்றை தமிழக ஆட்சியாளர்கள் கடைபிடிக்கவில்லை.
ஊடகங்கள் நவீன தீண்டாமையில் ஈடுபடுகிறது -ராமதாஸ் அறிக்கை
தமிழக ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் தில்லிக்கு சென்று நாடாளுமன்ற வளாகத்திலோ, பிரதமர் இல்லத்திலோ முற்றுமைப் போராட்டம் நடத்தி இருக்கலாம். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தயாராக இல்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினால் அரசியல் சாசன நெருக்கடி ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காவது மத்திய அரசு இறங்கி வரும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார். ஆனால், பதவி விலகினால் காவிரிக்காக எவ்வாறு போராட முடியும்? என்று கூறி அந்த வாய்ப்பை பினாமி அரசு நிராகரித்து விட்டது.
அடுத்து மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகள் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கலாம் என்று யோசனைக் கூறப்பட்ட போது, தமிழகத்துக்கு துரோகம் செய்த ஆந்திரக் கட்சிகளை எப்படி ஆதரிக்க முடியும்? என்று பினாமி அரசு வினா எழுப்பியது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை -EPS!
அப்படியானால், அதிமுகவே மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாமே? என்று கேட்டால், அதை ஒரு தேசத்துரோகம் போல நினைத்து அமைதியாகி விட்டனர் ஆட்சியாளர்கள். இப்படியாக மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளிலும் தமிழக அரசு கோட்டை விட்டது.
இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட 8 மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகலாம். அதற்குள் இந்த பிரச்சினையை நீர்த்துப் போக வைத்து விடலாம் என்பது தான் மத்திய அரசின் திட்டமாகும். அதற்கேற்ற வகையில் தான் மத்திய அரசு வகுத்துக் கொடுக்கும் திட்டத்தின்படி தமிழக அரசு செயல்படுகிறது. இதற்கு நடுவே தாங்கள் இந்தப் பிரச்சினையில் தீவிரமாக காட்டிக் கொள்ள தற்கொலை வசனங்களை பினாமி அரசின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் முழங்குவார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் ஒன்று மட்டுமே தீர்வு :ரஜினிகாந்த்
மொத்தத்தில் காவிரிப் பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழகத்தில் ஒரு பொம்மலாட்டம் நடக்குது... அது ரொம்பப் புதுமையாக இருக்குது! மக்களுக்கு மட்டும் ஏமாற்றமே கிடைக்குது.
இவ்வாறு தனது அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.