மேட்டூர் அணையிலிருந்து 1.75 லட்சம் கனஅடி நீர்திறப்பு!!
மேட்டூர் அணையில் நீர்திறப்பு 1.70 லட்சம் கனஅடியில் இருந்து 1.75 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு!
மேட்டூர் அணையில் நீர்திறப்பு 1.70 லட்சம் கனஅடியில் இருந்து 1.75 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. மேலும் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 2.06 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகின்றது.
அதன்படி மேட்டூர் அணையில் இருந்து சுமார் 1.70 லட்சம் கனஅடியில் இருந்து 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் நீர்மட்டமானது முழு கொள்ளளவில் இருந்து குறைந்தபாடில்லை சுமார் 120.05 அடியை கொண்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்இருப்பு 93.55 டிஎம்சி-யாக உள்ளது. காவிரிக்கு வரும் நீர் திறந்துவிட பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி கரையோறு பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.