மழை எதிரொலி: 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று லீவு!!
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக முழுவதும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர், திருவாரூர், நாகபட்டினம், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.