சென்னை: நிவர் புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிவர் புயல் (Nivar Cyclone) மற்றும் கனமழை சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 4 லட்சமும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 6 லட்சமும் என மொத்தம் 10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழக முதல்வர் (Edappadi K. Palaniswami) தெரிவித்துள்ளார். 


 



நிவர் புயலின் போது 61 மாடுகள், 5 எருதுகள், 65 கன்றுகள், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த  மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16,000 ரூபாயும், , ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.


ALSO READ |  CM on Nivar: 1500 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிப்பு, சேதம் மதிப்பீடு செய்யப்படும்


அதேநேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Mod), தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இன்று இரவு 9.00 மணியளவில் தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்டு "நிவர்" புயலால் ஏற்பட்ட  பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


 



ALSO READ | அடுத்த வாரம் தமிழகத்தில் அதிக மழை பெய்யும்: வானிலை மையம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR