நூறு நூறாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் தமிழகத்தில் 102 பேருக்கு..
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதேபோல இந்த தொற்று நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகிறது.
சென்னை: நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதேபோல இந்த தொற்று நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகமாகி வருகிறது. தற்போது நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு கோரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.
இதுக்குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இறைச்சிக் வரும் ஏப்ரல் 12 வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஏதாவது அறிகுறிகள் இருப்பதாக தெரிந்தால் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துக்கொள்ளவும் என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தம் கோவிட் -19 வழக்குகள் 2301 ஆக உயர்ந்துள்ளன. மேலும் 235 புதிய வழக்குகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதுவரை இந்த நோயினால் 56 இறப்புகள் ஏற்பட்டு உள்ளன. அவற்றில் குறைந்தது 12 மரணங்கள் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளன என சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.