தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை; ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படவில்லை; ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.


தமிழகத்தில் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு அதற்கான அட்டவணையை வெளியிட்டது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்டது போல பத்தாம் வகுப்புக்கும் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்றும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமாக தெரிவித்துள்ளது. 


கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல பத்தாம் வகுப்புத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தேர்வு நடைபெறுமா..? அல்லது ரத்து செய்யப்படுமா.?  என்ற கேள்வி எழுந்தது.