முடிந்தது விடுமுறை - சென்னைக்கு வர சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு
தொடர் விடுமுறைகளுக்கு பிறகு சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப கூடுதலாக 1150 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
வார இறுதி, காந்தி ஜெயந்தி, சரஸ்வதி, பூஜை, விஜய தசமி என அக்டோபர் மாத தொடக்கமே பலருக்கும் தொடர் விடுமுறையாக இருந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மென்பொருள் பொறியாளர்கள் உள்பட பலருக்கும் விடுமுறை என்பதால் கடற்கரைகள், திரையரங்குகள் என அனைத்து இடங்களும் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது.
அதுமட்டுமின்றி, நீண்டு விடுமுறையை திட்டமிட்டு பலரும் வேலை பார்க்கும் வெளி மாவட்டங்களில் இருந்து தங்களின் சொந்த மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். இன்றுடன் விடுமுறைகள் நிறைவடைவதால், அவர் மீண்டும் தாங்கள் பணிபுரியும் மாவட்டங்களுக்கு திரும்புவார்கள்.
மேலும் படிக்க | தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? பேருந்து கட்டண விவரங்கள் இதோ
அந்த வகையில், தொடர் விடுமுறை தங்களின் சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பி வருவோருக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்," தொடர் விடுமுறை முடிந்து பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வருவதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இருதினங்களுக்கு (அக். 5 & அக். 6) அரசு போக்குவரத்து கழகங்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகள் உடன் கூடுதலாக 1150 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஆக மொத்தம் 3250 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளத்தையும், tnstc official app செயலியையும் அணுகவும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் மேற்கூறிய சேவையை பயன்படுத்தி, பலன்பெறுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். வரும் அக். 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதற்கான முன்பதிவுகள் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ