130 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய இடத்தில் வைத்திருக்கும் சசிகலா
தனது ஆதரவு எம்எல்ஏ-க்களை சசிகலா சிய இடத்தில் வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் கூறி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். சசிகலா தலைமையில் இன்று அதிமுக எம்எல்ஏ தலைமை கூட்டம் கூடியது. அப்பொழுது பெருவாரியான எம்எல்ஏ-க்கள் சசிகலாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சசிகலா மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ இன்றிரவு டெல்லி சென்று ஜனாதிபதி அவர்களை சந்திப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் சசிகலா அவர்கள் தனது ஆதரவு 130 எம்எல்ஏ-கள் குதிரை பேரத்தில் ஈடுபடாமல் இருக்க அவர்களை ரகசிய இடத்தில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்களித்த மக்களின் எண்ணங்களை கருத்தில் கொண்டு எம்.எல்.ஏக்கள் செயல்பட வேண்டும். என்னுடைய பின்னணியில் திமுகவோ, பாஜகவோ என யாரும் யாரும் இல்லை. புதிய கட்சி தொடங்கும் எண்ணமும் இல்லை. கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் எனது சுற்றுப்பயணம் தொடரும். அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நான் முதலமைச்சர் பொறுப்பு ஏற்பேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.