ஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில்1381kg தங்கம் பறிமுதல்!
ஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 1381 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
ஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 1381 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி கடந்த 11-ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைப்பெற்றுத. இரண்டாம் கட்டமாக, தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
எதிர்வரும் தேர்தலை ஜனநாயக முறையில் நடத்திட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் சட்டவிரோதமான பண பறிமாற்றம் ஏதும் நிகழாமல் இருக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் அவ்வப்போது தமிகத்தின் தொகுதிகளில் பதிக்கி வைக்கப்பட்டுள்ள பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய அதிரடி சோதனையில், ஆவடி அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் உரிய ஆவணங்களின்றி 1,381 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்த தங்கம் பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் என தெரிய வந்துள்ளது.
முன்னதாக வேலூர் தொகுதியில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், அத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையர் பரிந்துறையின் பேரில் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.