மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு 15 நாள் அவகாசம்- அமைச்சர்
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக பொதுமக்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது.
சென்னை : கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக பொதுமக்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. மேலும் இடுப்பளவு தேங்கி கிடந்த மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கும் இக்கட்டான சூழல் உருவானது.பல சாலைகள் குளங்களாக மாறி காட்சியளித்தது.
இதனையடுத்து பல வழித்தடங்களில் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டது.சென்னையிலுள்ள சுரங்கப்பாதைகள் அனைத்திலும் மழை நீர் புகுந்து சுரங்கப்பாதையை மூடியது.பல குடியிருப்புகளுக்கு உள்ளோம் மழைநீர் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைத்தும், அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளையும் அரசு அளித்தது.மேலும் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்களும் சென்னை திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
நேற்றைய தினம் வீசிய பலத்த காற்று மற்றும் அதிகப்படியான கனமழையின் காரணமாக பல இடங்களில் மின் சேதம் ஏற்பட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார இணைப்பு பல இடங்களில் துண்டிக்கப்பட்டுவிட்டது. இந்த இடர்பாட்டின் காரணமாக பலருக்கும் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.அதனையடுத்து, மக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து இந்த மழை நீரால் ஏற்பட்ட பாதிப்பு குறைந்தும் உடனடியாக அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் கூறினார்.
ALSO READ சென்னை ஓட்டுனரின் அலட்சியதால் சுரங்கப்பாதையில் சிக்கிய மாநகர பேருந்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR