ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காத 1500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் விரைவில் அனுப்பப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில், ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காமல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்காக கேட்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மத்திய அரசு நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆயிரத்து 500 ஆசிரியர்களிடையே வேலை பறிபோகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.


இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காத 1500 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் விரைவில் அனுப்பப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின் விவரங்களை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.