தமிழகம் முழுவதும் 17,268 அரசுப் பேருந்துகள் இயக்கம்
தமிழகம் முழுவதும் 17,268 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 17,268 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முதல் நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 30 சதவீதப் பேருந்துகளே இயக்கப்பட்டன. தலைநகர் சென்னையில் 10% பேருந்துகளே இயங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர். தமிழகம் முழுவதும் நேற்று 67% பேருந்துகள் இயங்கவில்லை எனப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.
இதனால் வேலைக்குச் செல்பவர்களும், மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டர். செங்கல்பட்டு , அரக்கோணம், ஆவடி உள்ளிட்ட புற நகர்களிலிருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் சென்னைக்குப் பேருந்து மூலம் வந்து பணிகளுக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரும் இன்று போக்குவரத்துக்காக புறநகர் ரயிலை மட்டுமே பயன்படுத்த முடிந்தது. இதனால் புறநகர் மின்சார ரயில்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. ஆட்டோ உள்ளிட்ட தனியார் போக்குவரத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்குமா?.. தொமுச தகவல்
வேலை நிறுத்தம் இன்றும் தொடர்வதால், மக்கள் இதே சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், பொதுமக்களின் நலன் கருதி இன்று அதிக அளவிலான பேருந்துகள் இயங்கும் எனவும், முன்னணி நிர்வாகிகள் மட்டும் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனவும் தொமுச அறிவித்தது. அதன் அடிப்படையில் இன்று தமிழகத்தில் 90% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாகப் போக்குவரத்துத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றாலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மாநகரப் பேருந்துகள், வெளிமாவட்டப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 98.2% மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மண்டலத்தில் 99.04% பேருந்துகள், மதுரை மண்டலத்தில் 90.12% பேருந்துகள், கும்பகோணத்தில் 99.39% பேருந்துகள், கோவையில் 100% பேருந்துகள், திருநெல்வேலி மண்டலத்தில் 96.99% பேருந்துகள், விழுப்புரம் மண்டலத்தில் 85.81% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன'' என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை...வேலை நிறுத்தத்தால் மக்கள் அவதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G