18MLA: மேல்முறையீடு செய்யப்போவதில்லை; நேரடியா தேர்தலை சந்திக்க தயார் -TTV
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை; தேர்தலை சந்திக்க தயார் என TTV தினகரன் தெரிவித்துள்ளார்!
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை; தேர்தலை சந்திக்க தயார் என TTV தினகரன் தெரிவித்துள்ளார்!
மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் டி.டி.வி.தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை. இடைத்தேர்தலை சந்திக்க உள்ளோம். 20 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி வெற்றி பெறும். ஆனால் தேர்தல் அறிவிப்பதற்குள் சுனாமி வருகிறது, புயல் வருகிறது என்று கூறுவார்கள். தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆர்.கே நகர் தேர்தலின் போதே நாங்கள் வெற்றி பெறமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரியும். ஜெயக்குமார் என்னை மண் குதிரை என்று சொல்கிறார். அவர் யார் என்பது தற்போத அனைவருக்கும் தெரிந்துவிட்டது. எனவே அவர்பேசுவதை பற்றி பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. மண் குதிரை யார் என்று மக்களுக்கு தெரியும்.
பட்டாசு தொழிலை நம்பி தென்மாவட்டங்களில் பல குடும்பங்கள் உள்ளன. எனவே இந்த விவகாரத்தில் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் மீது சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டபோது முதல்வர் காட்டிய வேகத்தை இதிலும் காட்டவேண்டும்" என்றார்.