2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை:HC
ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை!
ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை!
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது 2.0 திரைப்படம். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகக் கூடியுள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாகவும் எமி ஷாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளதாலும் பாலிவுட் தரப்பிலும் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தீபாவளியன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்த படக்குழு, கிராஃபிக்ஸ் வேலைகள் முடிவடையாத நிலையில், படம் வெளியாகவில்லை. தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து நாளை மறுதினம் ரிலீஸாக உள்ளது. ஏற்கெனவே படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
இதையடுத்து, 2.0 இரண்டு மணி நேரம் 28 நிமிடங்கள் நீளமுடைய திரைப்படம் (148 நிமிடங்கள்) மற்றும் ஒரு சில நாட்களுக்கு முன்பு இப்படத்திற்கு U / A சான்றிதழ் வழங்கியது. நாளை திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை விதித்துள்ளது.
மேலும், நீதிமன்றம் தடை விதித்தாலும், தமிழ் ராக்கர்ஸ், இணையதள முகவரியில் எழுத்துக்களை மாற்றம் செய்து புதிய படங்களை வெளியிட்டு வருவதாக லைக்கா நிறுவனம் குற்றம்சட்டியுள்ளது.