Chennai: ஜூஸ் பவுடரில் 2.5 கிலோ தங்கத் துகள்கள் கடத்தல்
வெளிநாட்டில் இருந்து வரும் தபால் பார்சல்கள் வழியாக தங்கக் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிகப் பெரிய தங்கக் கடத்தல் பிடிபட்டது.
சென்னை: வெளிநாட்டில் இருந்து வரும் தபால் பார்சல்கள் வழியாக தங்கக் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிகப் பெரிய தங்கக் கடத்தல் பிடிபட்டது.
துபாயில் இருந்து வந்த தபால் பார்சலில் விதைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த பார்சலில் தங்கம் உள்ளதா என்ற சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது 2.5 கிலோ தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்கப்படவிருந்த பார்சல் திறந்து பார்க்கப்பட்டது. அதில் இன்ஸ்டன்ட் ஆரஞ்சு ஜூஸ் கலவையின் (Instant Orange juice) நான்கு டப்பாக்களும் ஓட்ஸ் மற்றும் சாக்லேட்டுகளின் பாக்கெட்டுகளும் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்த பார்சல்கள் வழக்கத்திற்கு மாறாக கனமாக இருந்ததாக கண்டறியப்பட்டதால் அவை பரிசோதிக்கப்பட்டன.
Also Read | தவறு செய்தால் பதவி நீக்கம்: தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
அந்த பெட்டிகளில் Instant Orange juice கலவை தூளுடன் தங்கத் துகள்களும் கலந்திருந்தன. 1.20 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத் துகள்கள் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பெறுநரின் முகவரியில் மேற்கொள்ளப்பட்ட தேடல்களில் முகவரி தவறாகப் இருந்தது தெரியவந்தது.
துபாயில் (Dubai) இருந்து வந்த கடத்தப்பட்ட 1.20 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.5 கிலோ தங்கத் துகள்கள் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த தங்கக் கடத்தலில் அஞ்சலக ஊழியர்களின் பங்கு குறித்து ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்படி ஜூஸ் பவுடரில் தங்கப் பொடி கலந்து, தங்கக் கடத்தல் (Gold smuggling) செய்யும் உத்தி புதிதாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தங்கத்தை கடத்துவதற்கு எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்!
Also Read | MDMK: ஏழு தமிழர்களை விடுதலை செய்க! வைகோ வேண்டுகோள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR