திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கீகாரமின்றி 25 பள்ளிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கீகாரமின்றி 25 பள்ளிகள் செயல்படுவதாக ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கீகாரமின்றி 25 பள்ளிகள் செயல்படுவதாக ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரம் பெறாமலும், உரிய தடையின்மை சான்று பெறாமலும் இயங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அவ்வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் இன்றி 25 பள்ளிகள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். அங்கீகாரமின்றி தொடர்ந்து செயல்படும்பட்சத்தில் பள்ளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.