குற்றாலத்தில் பிரதான, ஐந்தருவி, பழைய அருவிகளில் குளிக்க 2-ஆவது நாளாக தடை விதிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் நாட்டில் நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது நெல்லை மாவட்டம், தென்காசி அருகே இருக்கும் குற்றாலம் அருவி. பொதுவாக தண்ணீரில் விளையாடுவது நிறைய பேருக்குப் பிடிக்கும். அதுவும் அருவி நீர் என்றால் சொல்லவே வேண்டாம். தமிழ் நாடு மட்டுமல்லாமல், வெளி மாநில சுற்றுலா பயணிகளும் அடிக்கடி வந்து செல்லும் இடமாக குற்றாலம் அருவி உள்ளது. 


இந்நிலையில் தற்போது ஐந்தருவியில் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. 


மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் பிரதான, ஐந்தருவி, பழைய அருவிகளில் குளிக்க 2 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 


அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது!