சென்னை: தமிழக சட்டசபையின் 2-வது நாள் கூட்டம் இன்று நடந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கூட்டத்தில் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, முன்னாள் தமிழக கவனர்னர் பர்னாலா, சோ.ராமசாமி, கோ.சி. மணி, பாலமுரணி கிருஷ்ணா ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 


இதனையடுத்து கடந்த டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமான ஜெயலலிதா மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 


இதற்கான தீர்மானத்தை முதல்வர் பன்னீ்ர்செல்வம் முன்மொழிந்தார். டிசம்பர் 5 ம் தேதி தமிழகத்தின் இருண்ட நாள். என்றார்.


தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதலிடத்திற்கு கொண்டுவர பாடுபட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.


தமது வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் புரட்சித்தலைவி அம்மா- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.


புரட்சித்தலைவி அம்மா பூவுலகத்தில் இருந்து மறைந்தாலும், இதயத்தில் இருந்து தமிழகத்தை வழிநடத்தி செல்கிறார்- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.