தமிழகத்தில் மேலும் 3 நகரங்களில் நீட் நுழைவு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் டிவிட்டரில் வெளியிட்ட பதிவு:-


கடந்த வருடம் 80 இடங்களில் நடந்த நீட் தேர்வானது, இந்த ஆண்டு மேலும் 23 நகரங்களில் நடக்கும். இதன்மூலம் இந்த வருடம் 103 இடங்களில் நீட் தேர்வு நடக்கும். ஐஐடி, ஜேஇஇ தேர்வு நடந்த இடங்களில் நீட் தேர்வு நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


இந்நிலையில், தமிழகத்தில் நெல்லை, நாமக்கல், வேலூர் ஆகிய நகரங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் இன்று தெரிவித்தார்.