மின்தடையால் அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் பலி
புதுச்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின் போது ஏற்பட்ட மின்தடையால் 3 நோயாளிகள் பலி
புதுச்சேரி அரசு மருத்துமனையில் ரத்தசுத்திகரிப்புச் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட சுசீலா (77), அம்சா (55), கணேஷ் (54) ஆகிய மூன்று பேருக்கு இன்று சிகிச்சை நடத்தப்பட்டது. நோயாளிகளுக்கு இயந்திரம் மூலம் ரத்த சுத்திகரிப்பு நடக்கும் போது மின்சாரம் மருத்துவமனையில் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
மின்வெட்டினால் சிகிச்சை அளிப்பதும் தற்காலிகமாக தடைபட்டது. இதனால், சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமுற்ற நோயாளிகளின் உறவினர்கள் ஆஸ்பத்திரி கண்ணாடியை நொறுக்கினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அறிவித்திருக்கிறார். மேலும், சம்பந்தப்பட்ட வார்டில் பணியில் இருந்த மருத்துவர், செவிலியர் மற்றும் தொழிலநுட்ப ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யவும் அவர் உத்தவிட்டுள்ளார்.