தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் அரசு பள்ளிகள் மூடப்படுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்டபோது பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள தகவலின்படி, தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவாரூர்-2, நாட்றம்பள்ளி-1, தேவக்கோட்டை -4, தட்டால கொளத்தூர்-1, திருவள்ளூர்-1,  பர்கூர்-1, தாராபுரம்-1,  புள்ளம்பாடி-1, மயிலாடுதுறை-1, ஆரணி-1, கெலமங்கலம்-1, திண்டுக்கல்-4,  லால்குடி -2, தர்மபுரி-1, திருவண்ணாமலை-1,  திருப்பூர் -5, வேலூர்-2, நீலகிரி-5, தேனி -5 என அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.


மேலும் 669 தொடக்கப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரக்கூடிய விவரங்களும் வெளியாகியுள்ளது. தனியார் பள்ளிகளின் மீதான ஆர்வம் அதிகரித்து மாணவர்கள் அரசு பள்ளிகளிலிருந்து வெளியேறியுள்ளதை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் புள்ளிவிவரங்கள் எடுத்துரைக்கின்றன.


மேலும் படிக்க | கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் கொண்டு பள்ளிக்கு தீ? வெளியான அதிர்ச்சி தகவல்!


அரசுப் பள்ளிகளில் உரியக் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, மாணவர்கள் மதிப்பெண் குறைவாக பெறுவது, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ஆட்சியாளர்கள் உரிய கவனம் செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு காரணிகளாக அமைந்திருக்கின்றன. வரக்கூடிய ஆண்டுகளிலும் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே புள்ளி விவரங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன..


அரசு பள்ளிகள் மூடப்படுவது என்பது திமுக, அதிமுக என 2 கட்சிகளின் ஆட்சி காலத்திலும் நடந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மாணவர் சேர்க்கை முற்றிலும் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். 


நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளதாகவும்,  அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை கட்டாயம் ஏற்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் உத்தரவு  வழங்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 


மேலும் படிக்க | சேதமடைந்த சான்றிதழ்களை திருப்பி வழங்க நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஸ்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ