சென்னை: காஞ்சிபுரத்தில் 10 கிலோமீட்டர், 25 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் செய்தும், லிம்போ ஸ்கேட்டிங் பிரிவில் என 5 மாணவர்கள் சாதனை மேற்கொண்டு தனியார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்த விளையாட்டை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி, அதில் நேர்த்தியான பயிற்சிகள் மேற்கொண்டு சாதனைகளை மாநில அளவிலும் உலக அளவிலும் மேற்கொள்ள தயார் படுத்திக் கொண்டு அதில் வெற்றி கண்டு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவ்வகையில் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா அருகே செயல்பட்டு வரும் காஞ்சி ஸ்கேட்டிங் பயிற்சி மையத்தில் பயிற்சியாளர் பாபு தலைமையில், 200க்கும் மேற்பட்ட இளம் வீரர் மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டில் வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.


இதில் மூன்று வயதே ஆன சிறுவன் ஆத்விக் 10 கிலோமீட்டர் ஸ்கேட்டிங் தூரத்தை கடந்தும், குஷால் என்ற சிறுவன் இருபத்தைந்து கிலோமீட்டர் தூரத்தை 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் செய்து கடந்து சாதனை புரிந்துள்ளனர். இது பார்க்கும் அனைவருக்கும் பரவசம் ஏற்படுத்தியது.


மேலும் படிக்க | மாணவிகள், ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வரை கைது செய்யக்கோரி போராட்டம்


ஒரு அடி உயரம் உள்ள லிம்போ ஸ்கேட்டிங் எனும் தடுப்பின் கீழ் தீயினிடையே செல்லும் சாதனையில் 9 வயது சிறுவன் யஸ்வந்த், 12 வயது சிறுவன் கோகுல்ராஜ், 8 வயது சிறுவன் நேமாறன் ஆகியோர் சாதனைகளை மேற்கொண்டு தனியார் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.


இச்சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் நடுவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போதைய வளர் இளம் வயது நபர்களுக்கு ஊட்டச்சத்து தேவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை உணவுகள் அதன் பயன்கள் குறித்த கண்காட்சியும் அந்த வளாகத்தில் நடைபெற்றது.


சாதனை புரிந்த வீரர்களுக்கு தனியார் உலக சாதனை புத்தக நிர்வாகிகள் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி அவர்களை கௌரவப்படுத்தினர். கூடியிருந்த மக்கள் ஆரவாரத்துடன் மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து உற்சாகப்படுத்தினார்கள்.


மேலும் படிக்க | பிரதமர் இந்த காரணத்திற்காக தான் தமிழகம் வருகிறார் - முதல்வர் ஸ்டாலின்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ