தமிழகத்தை மிரட்ட காத்திருக்கும் கனமழை -வானிலை மையம் தகவல்!!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்....!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்....!
தென்மேற்கு பருவமழையானது வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு கேரளா மற்றும் கர்நாடகாவில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை அதிகளவில் பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது...!
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.
நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாகக் கோவை மாவட்டத்திலுள்ள 26 செ.மீ. மழையும் குறைந்தபட்சமாக உதகமண்டலம், பாபநாசம், பேச்சிப்பாறை, குளச்சல், குழித்துறை பகுதிகளில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
பலமான காற்று தென்மேற்கு மற்றும் மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வீசக்கூடும். அதேபோன்று, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலமான காற்று தென்மேற்கு மற்றும் மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ. முதல் 55-60 கி.மீ. வேகத்தில் வீசும். தமிழகத்தில் குளச்சல் - தனுஷ்கோடி கடலோரப்பகுதிகளில் வரும் 19-ம் தேதி வரை கடல் அலைகள் 11-14 அடி உயரத்துக்கு இருக்கும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.