நாடாளுமன்றத்தில் திமுக எழுப்பவுள்ள 5 பிரச்சனைகள் - டி.ஆர்.பாலு தகவல்
குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நீட், வேளாண் சட்டம் உள்ளிட்ட 5 பிரச்சனைகளை எழுப்பவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப் தேர்தல்களுக்கு முன்பாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் மத்திய பா.ஜ.க அரசுக்கு நெருக்கடியை கொடுக்க திட்டமிட்டுள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாட்டில் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்சனைகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளன. இது குறித்து பேசிய திமுக மக்களவை குழு தலைவர், டி.ஆர்.பாலு, குளிர்கால கூட்டத் தொடரில் திமுக எழுப்ப திட்டமிட்டுள்ள பிரச்சனைகளை பட்டியலிட்டார். அதன்படி, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அவையில் பேசுவதற்கு நேரம் ஒதுக்குமாறு திமுக கேட்டிருப்பதாக கூறினார்.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களில் விலை கடுமையாக உயர்த்திருப்பதற்கு பெட்ரோல், டீசல் விலையே காரணம் எனக் குற்றம்சாட்டிய அவர், அதனை குறைக்குமாறு மத்திய அரசுக்கு திமுக இந்தக் கூட்டத்தொடரில் வலியுறுத்தும் எனத் தெரிவித்தார். அதேபோல், திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் திமுக குரல் கொடுக்கும் எனக் கூறிய டி.ஆர். பாலு, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்று, விவசாயிகள் கேட்கும் குறைந்தபட்ச ஆதார விலை குறித்த சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்துவோம் எனத் தெரிவித்தார்.
திமுக எழுப்ப திட்டமிட்டுள்ள 5 பிரச்சனைகளையும் மற்ற எதிர்க்கட்சிகளும் எழுப்ப முடிவெடுத்துள்ளன. குறிப்பாக, பெட்ரோல், டீசல் விலை மற்றும் வேளாண் சட்டங்களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று, குரல் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தக் கூட்டத்தொடர் நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளை சமாளிக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆளும் பா.ஜ.க அரசும் திட்டமிட்டு வைத்துள்ளது. நிர்வாக ரீதியாவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கட்சிகள் அடுக்கும் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது இப்போது வரை புதிராக உள்ளது.
ALSO READ திரைப்படத்துறை மீதான விமர்சனங்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்- அண்ணாமலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR