கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அத்துறையின் அமைச்சர், தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என தெரிவித்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 5,329 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், விதிகளுக்கு அப்பாற்பட்டு அதாவது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்துக்கு உள்ளே இருக்கும் கடைகள், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கடைகளை கணக்கெடுக்கும்படி உத்தரவிடப்பட்டது.


மேலும் படிக்க | முடிந்தது சர்ஜரி... செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி உள்ளது? - காவேரி மருத்துமனை பதில்


500 கடைகள் மூடல்:


இதன்படி, 500 கடைகளை நாளை முதல் (22.6.2023) மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் நாளை முதல் (22.6.2023) செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை மண்டலத்தில் 138 கடைகள், கோவை மண்டலத்தில் 78 கடைகள், மதுரை மண்டலத்தில் 125 கடைகள், சேலம் மண்டலத்தில் 59 கடைகள், திருச்சி மண்டலத்தில் 100 கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


500 கடைகள் - கண்டறிந்தது எப்படி?


>கடைகளின் கூட்டம்


>வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ள கடைகள்


> நீண்ட நாட்களாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் கடைகள்.


>கடையை மூடுவது தொடர்பான நீதிமன்ற வழக்குகள்


>கட்டிட உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் கடைகள்


என்ற அடிப்படையில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவதற்கு கண்டறியப்பட்டுள்ளது.


>மூடப்படும் 500 கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய தனி உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.


>500 கடைகளை மூடும் போது, ​​அங்குள்ள மதுபாட்டில்கள் குடோன்களுக்கு மாற்றப்படும்.


அன்புமனி வரவேற்பு:
 
பாமக கட்சியின் தலைவ அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என நீண்ட நாட்களாக வலியிறுத்தி வந்தார். இந்த நிலையில் இன்று மதுக்கடைகள் மூடுவது குறித்த அறிவிப்பாணை வெளியானதை தொடர்ந்து இதற்கு அவர் வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் எனாரசு அறிவித்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதுகுறித்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். இதன் முதற்படியாக நாளை 500 கடைகளை மூடவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என குறிப்பிட்டிருந்தார். 


மேலும், தற்போது மூடப்படும் மதுக்கடைகள் தவிர மீதமுக்க 4,829 மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்படவேணும் என அன்புமனி வலியிறுத்தியுள்ளார். காலாண்டிற்கு 500 மதுக்கடைகள் மூடப்பட்டால் அடுத்தை இரண்டரை ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கு தமிழகத்தில் சாத்தியமாகிவிடும் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது: இலங்கை அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ