சென்னை முழுவதும் 520 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகளின் நீர்மட்டங்களும் வெகுவாக குறைந்து வருகின்றன. சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு போனதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகளின் நீர்மட்டங்களும் வெகுவாக குறைந்து வருகின்றன. சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு போனதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னைவாசிகளின் குடிநீர் பஞ்சத்தை போக்க 520 லாரிகள் மூலம் குடிநீர் வழங்கும் பணியில் குடிநீர் வாரியம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டது. இதனால வறட்சி ஏற்பட்டு பயிர்கள் கருகத் தொடங்கின.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகளின் நீர்மட்டங்களும் வெகுவாக குறைந்து வருகின்றன. சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்கும் ஏரிகள் நீரின்றி வறண்டு போனதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
நிலத்தடி நீர் இறங்கியது மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளதால் சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதைத் தடுக்க சென்னை குடிநீர் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
வள்ளுவர் கோட்டம், மாத்தூர், கே.கே.நகர், எம்.ஆர்.சி.நகர், பள்ளிப்பட்டு, கொளத்தூர், கள்ளிக்குப்பம், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி உள்பட 36 இடங்களில் இருந்து லாரிகள் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
நாளொன்றுக்கு 520 லாரிகள் மூலம் 4 ஆயிரத்து 200 முறை மேற்கூறப்பட்ட 36 இடங்களில் இருந்து குடிநீர் எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நாளொன்றுக்கு 6 ஆயிரத்து 500 முறை குடிநீர் எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுதவிர திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 300 விவசாய கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு அந்த தண்ணீர் அந்த மாவட்டத்தை ஒட்டியுள்ள குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான 10 பெரிய தொட்டிகளில் சேர்த்து வைத்து பின்னர், அங்கிருந்து புழல் ஏரிக்கு கொண்டு வரப்படுகிறது. புழல் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தலா 100 மில்லியன் லிட்டர் குடிநீர் வடசென்னை, தென்சென்னை மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.