53 வயது பெண் மரணம்... தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு
தமிழகத்தில் COVID-19 தொற்று மூலம் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் மூன்றாவது மரணம் இதுவாகும். முதல் நோயாளி, மார்ச் 25 அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இறந்தார். 2வது வில்லுபுரத்தை சேர்ந்த கொரோனா நோயாளி, வில்லுபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலமானார்.
தமிழ் நாடு: டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு தேனி திரும்பிய ஒருவருக்கு தொற்று இருந்தது. அவரைத் தொடர்ந்து அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால், 53 வயதான அந்த பெண்ணை தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு அந்த பெண்ணுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால், சிகிச்சை பலன்றி உயிரிழந்த்தார் என சுகாதார துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு தேனி மாவட்டத்துக்கு திரும்பிய 23 பேரில், 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இன்று காலை, "வில்லுபுரத்தில் வசிக்கும் நோயாளி, டெல்லியின் நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டார். அவர் COVID-19 க்கு நேர்மறை பரிசோதனை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் வெள்ளிக்கிழமை இரவு மோசமடைந்த மூச்சுத் திணறலை உணர்ந்தார். இவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை 7.44 மணிக்கு இறந்தார்.