₹140 கோடி மதிப்பில் 555 புதிய பேருந்துகள்; துவங்கி வைத்தார் முதல்வர்!
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிதாக 555 பேருந்துக்களை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் பழனிசாமி துவங்கிவைத்தார்!
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் புதிதாக 555 பேருந்துக்களை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் பழனிசாமி துவங்கிவைத்தார்!
தமிழகத்தில் புதிதாக 3000 பேருந்துகள் இயக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 515 பேருந்துகளும், அக்டோபர் மாதம் 471 பேருந்துகளும் மக்களின் பன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டன.
இந்நிலையில் மூன்றாவது கட்டமாக சுமார் 140 கோடி ரூபாய் மதிப்பிலான 555 பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் MR விஜயபாஸ்கர், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதுவரை மூன்று கட்டங்களாக 1540 பேருந்துகளின் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. முந்தைய அறிவிப்பின் படி மீதமுள்ள பேருந்துக்கள் விரைவில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.