புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 75 மேம்பாலங்கள் மூடப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 முடிவடைந்து, புதிய ஆண்டான 2020 வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரவுள்ளது. 2020 ஆண்டை வரவேற்க உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதற்காக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். பல இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.


மெரினா கடற்கரையில் கூடுபவர்கள் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, பலூன்கள் பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்பார்கள். அதேசமயம் சிலர் சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.


அந்தவகையில் சென்னையிலும் விபத்து இல்லாத, மகிழ்ச்சியான நிலையில் புத்தாண்டை வரவேற்பதற்காக சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையைப் பொறுத்தவரை 2500 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 


இந்நிலையில் இன்றிரவு சென்னையில் 38 பெரிய மேம்பாலங்கள் உள்பட 75 மேம்பாலங்கள் மூடப்படும். இன்றிரவு மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. மேலும் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மது அருந்தி இருந்தால், அவர்கள் தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். மது அருந்தியவர்கள், வேறு வாகனங்களில் செல்ல ஏற்பாடு செய்யப்படும். 



மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.