இந்தியாவின்  75வது சுதந்திர தினம் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 13ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு மரியாதை செலுத்தினார். பின்னர் இந்தியாவின் பிரதமராக 9வது முறையாக செங்கோட்டையை தேசிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


மேலும் படிக்க | Happy Independence Day 2022: சுதந்திர தினத்தில் வாழ்த்து சொல்ல சிறந்த கவிதைகள்! 


உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடந்த நிகழ்ச்சியில், தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


பின்னர், 1862 ஆம் ஆண்டு இதே நாளில் துவங்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் 160வது ஆண்டு நினைவைப் போற்றும் வகையில், சிறப்பு தபால் தலையை தலைமை நீதிபதி வெளியிட, நீதிபதி துரைசாமி பெற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிய நான்கு டிரைவர்களுக்கு தலைமை நீதிபதி, தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.


இந்த நிகழ்ச்சியில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


முன்னதாக தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் நடந்த சுதந்திர தின விழாவில், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இந்தியாவிற்கு இன்று 75வது சுதந்திர தினமா? அல்லது 76? குழப்பங்களுக்கு எளிய விளக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ